டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு – 16.30 லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை, 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

சென்னை, செப்-01

கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், வரித் தண்டலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி.யானது குரூப் 4 தேர்வை நடத்துகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 3,000 தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வெழுதினர். சென்னையில் மட்டும் 450 தேர்வு மையங்க்ளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். பறக்கும் படை உள்ளிட்ட 4,000க்கு மேற்பட்ட குழுக்கள் தேர்வு கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *