பருவமழை: ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை, அக்டோபர்-21

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் நிவாரண முகாமுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதே போன்று,  நீலகிரி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *