ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா.. அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி, அக்-14

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரியில் இன்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது; ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா பரவியது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *