மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவைக்கு அரசு அனுமதி
மகாராஷ்டிரத்தில் அக்டோபர் 15 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை, அக்-14

நாடு முழுவதுமான கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் அவ்வப்போது தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் பொதுமுடக்க நடவடிக்கைகளில் தளர்வுகளை அறிவித்திருந்தார்.
அதன்படி அக்டோபர் 15 முதல் மெட்ரோ ரயில் சேவை செயல்பட உள்ளது. மேலும் நூலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். வணிகக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மத வழிபாட்டுக் கூடங்கள் திறக்க தடை நீடிக்கிறது. தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை தொடர்கிறது.