தமிழக அரசு ரூ.9,627 கோடி கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கொடுக்க வேண்டியதால் வெளிசந்தையில் கடன் வாங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

டெல்லி, அக்-14

ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு தற்போது அளிக்க இயலவில்லை என்று மாநிலங்களுக்கு தெரிவித்திருப்பதால் அந்த இழப்பை சரி செய்யும் வகையில் கூடுதலாக கடன் பெற்று நிதி திரட்டி அந்த நிதியை அவசர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், பின்னர் இந்த கடன் தொகை, அதற்கான வட்டி இரண்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி படி நஷ்டயீடு கூடுதல் வரி மூலமாக சரிக்கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் 20 மாநிலங்கள் ஏற்கனவே இதன் மூலமாக தங்களுக்கு எந்தெந்த தொகைக்கு அனுமதி வேண்டும் என்பதை மத்திய நிதியமைச்சகத்துக்கு தெரிவித்து அனுமதி பெற்றிருந்தன. மத்திய அரசே ரிசர்வ் வங்கி மூலமாக கடன் திரட்டுவதற்கு தமிழக அரசுக்கு உதவி செய்யும். ஏற்கனவே மொத்தம் 21 மாநிலங்களுக்கு 78,452 கோடி ரூபாய் கடன் திரட்டுவதற்காக அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது. மேலும் உள்ள மாநிலங்களும் இதே வசதியை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைக்காததால் இன்னும் அவர்கள் இறுதி முடிவை எடுக்காமல் உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்துக்கும் 9,627 கோடி ரூபாய் கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *