திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.

சென்னை, அக்-14

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்ட 8 பேரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார். இக்குழுவில் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

வரும் ஜனவரி மாதம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் வார இறுதி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்ககும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *