ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’..கமல் ட்வீட்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அக்-14

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது. அரசின் கடமைகளைச் சுட்டிக் காட்ட மக்கள் நீதி மய்யம் என்றுமே தயங்கியதில்லை. கிராம சபைகளைக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை தமிழ்நாடு அரசிற்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதி மன்றத்தை மக்கள் நீதி மய்யம் அணுகியுள்ளது.
மக்கள் நலனுக்காக என்றும் குரல் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்.
என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *