வருமானம் இல்லாமல் ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு எப்படி சொத்து வரி கட்டுவது? ரஜினி வழக்கு.!!
ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, அக்-14

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தாலும், 5-ம் கட்டமாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் 8-ம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தொழில்சாலைகள் மூடங்கின. நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இதனை கருத்து கொண்டு மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கியது.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்படம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு, சென்னை மாநகராட்சி ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் வித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு குறித்து விசாரணை விரைவில் உயர்நீதிமன்றத்தில் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.