மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ்.. குஷ்பு அதிரடி..!

சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ் என பாஜகவில் இணைந்த குஷ்பூ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, அக்-13

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பின்னர் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் அவர் சந்தித்துப் பேசினார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகை குஷ்பு, மகிழ்ச்சியுடன் டெல்லியில் இருந்து திரும்பியுள்ளேன். பாஜவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் முயற்சியால் பாஜக-வில் இணைந்தேன். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க எல்.முருகன் பாடுபட்டு வருகிறார். ஒரு தலைவர் நாட்டிற்கு எங்கள் கட்சியால் தான் நல்லது செய்யமுடியும் என்று தங்கள் கட்சிக்கு அழைக்கிறார். மற்றொரு தலைவர் வெறும் நடிகையாக பார்த்ததாக சொல்கிறார். இருக்கிறவர்களுக்கு மரியாதை இல்லை. வெளியே செல்பவர்களுக்கு மரியாதை இல்லை. ஏன்? வெளியே செல்கின்றனர் என்று யோசிக்க திறமை இல்லை என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குற்றம்சாட்டினார். 6 வருடம் கழிந்தப்பின்தான் நான் நடிகை என்று தெரிந்தது. காங்கிரஸ் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு பாஜக தமிழக தலைமை அலுவலகம் கமலாலயம் சென்றபின் பதில் அளிப்பேன். கடந்த 6 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் விமர்சனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *