தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னை, அக்-12

வடகிழக்கு பருவமழை இம்மாதம் 3வது வாரம் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏரி, குளங்களை தூர்வாருதல், தாழ்வான பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மற்றும் பேரிடர் மீட்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பெய்யும் முதல் பருவமழை என்பதால், தொற்று பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.