இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86.36% ஆக உயர்வு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 61.49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி, அக்-12

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 71,20,539 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 816 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,09,150 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 61,49,536 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 71559 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,61,853 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.53 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 86.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *