காங்கிரசில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பூ கடிதம்..!
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
சென்னை, அக்-12

காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பும் என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கின்றனர் என்றும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்கள், கள நிலவரம் அறியாதவர்கள் தன்னை அடக்கி வைத்தனர் என்றும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.பணம், புகழை பெறுவதற்காக நான் காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்,’ என்று சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.