தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, அக்-10

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 51 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,97,033 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,357 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,272 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,80,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 82,32,725 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 91,191 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 191 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,93,452 பேர் ஆண்கள், 2,57,887 பேர் பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *