ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத டிரக்குகள் வாங்கி தர முடியாது.. பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் நவீன விமானமா?.. ராகுல் காட்டம்

ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8,400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி, அக்-10

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தனது டுவிட்டரில், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத டிரக்குகள், வாங்கி தர இயலாமல், பிரதமருக்கு 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பில் நவீன விமானம் வாங்கியிருப்பது நியாயமா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *