வடகிழக்கு பருவமழை.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 12ம் தேதி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 12ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, அக்-10

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கொரோனாவுக்கு பிறகு வரக்கூடிய முதல் பருவமழை என்பதால் கூடுதல் எச்சரிக்கையாக ஊராட்சி உள்ளிட்ட நிர்வாகங்கள் எல்லாம் இணைந்து செயல்பட வேண்டும் என்பதால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் குறித்தும் ஆலோசிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *