மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,048க்கு விற்பனை.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயா்ந்து, ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை, அக்-10

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 உயா்ந்து, ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 உயா்ந்து ரூ.4,881 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 1.70 உயா்ந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 உயா்ந்து, ரூ.66,700 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *