சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! மண்டல வாரியான விவரம்..!!

சென்னை, அக்-10

சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 13,446 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 79,424- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக 3,373 போ் உயிரிழந்துள்ளனா்.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 62,605 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 13,446 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 3,373- ஆக அதிகரித்துள்ளது.

அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் 1,300 என்ற அளவிலும், திருவிக நகரில் 1,200 என்ற அளவிலும், அம்பத்தூர், அடையாறில் 1000-க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் உள்ளனர். கடந்த மாதம் இறுதி வரை கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *