கடலூரில் பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலைவரை தரையில் அமரவைத்து அவமரியாதை..!

கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை அவமதித்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர், அக்-10

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மோகன் மீது புவனகிரி காவல்நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.
மேலும் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சிமன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனகிரி காவல்நிலைய காவலர்கள் ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி கூறுகையில், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இன்றுதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவுடன் அந்த ஊராட்சிக்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *