விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு தீவிரம்…

விழுப்புரம், அக்டோபர்-21

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ் பேரரசு கட்சி சார்பில் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பணிகளில் 1333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 157 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. போட்டியிடும் 12 வேட்பாளர்களில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் உட்பட 6 வேட்பாளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். இந்நிலையில், அத்தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.84% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 32.54% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *