நாடாளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் 18ல் தொடக்கம்
டெல்லி.அக்டோபர்.21
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 வரை நடைபெறும். இது தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் செயலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் மற்றும் அமர்வுகள் குறித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குளிர்கால கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.