பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு..! எதற்கு அனுமதி? எதற்கு தடை?

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, அக்-9

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தில் மத்திய அரசு அவ்வபோது தளர்வுகளை அறிவித்து வந்தது. அந்த வகையில், தற்போது அக்.,31 வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்படவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பொழுது போக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  • பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
  • பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • 65 வயதிற்கு மேல், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை.
  • பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை.
  • அதிக அளவு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.
  • பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்களை ஆன்லைனனில் விற்க ஏற்பாடு செய்யவேண்டும்.
  • பார்வையாளர்கள் அனைவரும் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
  • பூங்காக்களில் கிருமி நாசினி வைக்க வேண்டும்.
  • இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *