அக்.13 முதல் 3 மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்..!

3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னை, அக்-9

கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *