இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.06 லட்சத்தை தாண்டியது..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.06 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 69 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-9

Municipal workers in protective gear carry the body a woman who died due to coronavirus disease (COVID-19), for her cremation at a crematorium in Ahmedabad, India, April 17, 2020. REUTERS/Amit Dave

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 69,06,152 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 964 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,06,490 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,06,070 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 78365 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,93,592 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.54 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 85.52 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *