மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்..!
மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74.
டெல்லி, அக்-8

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் ராம்விலாஸ் பஸ்வான். பீகார் மாநிலத்தின் லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனரான பஸ்வான், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் பஸ்வான் உயிர் பிரிந்தது.
50 ஆண்டு காலமாக அரசியலில் இருந்த ராம்விலாஸ் பஸ்வான், பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் 1946-ம் ஆண்டு பிறந்தார். 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் ராம்விலாஸ் பஸ்வான். முதல்முறையாக 1977-ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். 1977, 1980,1989,1996,1998,2004,2014,2016-ல் நாடாளுமன்ற உறுப்பினராக ராம்விலாஸ் பாஸ்வான் பதவி வகித்துள்ளார்.