முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை மொத்தம் ரூ.399.93 கோடி பெறப்பட்டது.. தமிழக அரசு

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, அக்-8

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளுக்கென முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 21.7.2020 அன்று வரை மொத்தம் 394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ரூபாய் வரப்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 22.7.2020 முதல் 7.10.2020 வரை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரங்கள்:-

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 1 கோடி ரூபாய்.
கேஏஎல்எஸ் குருப் ஆப் கம்பெனிஸ், சென்னை 1 கோடி ரூபாய்.
ஹிந்துஸ்தான் பேங்க் லிமிடட் 95 லட்சம் ரூபாய்.
நீதித்துறை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் 49 லட்சத்து 56 ஆயிரத்து 851 ரூபாய்.
இராம. ராமநாதன், சேர்மன், கும்பகோணம் மீயூட்சுவல் பெனிஃபிட் ஃபண்ட் நிதி லிமிடெட், கும்பகோணம் 25 லட்சம் ரூபாய்.
கலைஞர் நினைவு இண்டர்நேஷனல் வர்ச்சுவல் மாராத்தான் 2020, 23 லட்சத்து 41 ஆயிரத்து 726 ரூபாய்.
டெனோவா இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை 10 லட்சம் ரூபாய்.
7.10.2020 முடிய முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்ட மொத்த தொகை 399 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நாள்களில் நிவாரண நிதி அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தொடர்ந்து அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், தமிழக முதல்வர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *