சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை, அக்-7

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்பேட்ட உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சசிகலாவில் 1,600 கோடி சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதுவரை சசிகலாவின் 65 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ள ரூ.300 கோடி மதிப்பு, 200 ஏக்கர் 65 சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *