சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.. எல்.முருகன் பேட்டி..!
அதிமுகவில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக-பாஜக கூட்டணிதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்-7

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியதாவது ;-
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2016ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது போலவே இந்த முறையும் பெருவாரியான வெற்றியை நிர்ணயிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.