எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., மரியாதை
சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
சென்னை, அக்-7

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற ஈபிஎஸ் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது. கட்சி அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவர்களை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.