பஞ்சமி நில விவகாரத்தில் திருமா கருத்து: ஸ்டாலின் அதிருப்தி
சென்னை.அக்டோபர்.19
அறிவாலயமாக இருந்தாலும், சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த நிலம் பஞ்சமி நிலமா என்பதை கண்டறிய முதலமச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
அறிவாலயமாக இருந்தாலும், சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த நிலம் பஞ்சமி நிலமா
என்பதை கண்டறிய முதலமச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஏழு தமிழர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானதா என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
ஒருவேளை ஆளுநர் நிராகரித்தால், தமிழக அரசு மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பா.ஜ.கவுக்கு ஆதரவாக அதிமுக கருத்து தெரிவித்து வருவதாக விமர்சித்த திருமாவளவன், சிறுபான்மையினர் குறித்து ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பா.ஜகவுடையது என குற்றம்சாட்டினார். தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிய முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
அறிவாலயமாக இருந்தாலும், சிறுதாவூர் அரண்மனையாக இருந்தாலும் அந்த இடம் பஞ்சமி நிலமா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். திருமாவளவனின் இந்த கருத்து திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.