இந்தியாவில் கொரோனா பாதிப்பு 67 லட்சத்தை கடந்தது

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 67 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-7

நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 72,049 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்தது. புதிதாக 986 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,787 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,07,883 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 85.02% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.55% ஆக குறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 13.44% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 11,99,857 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 8,22,71,654 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *