2020-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!

ஸ்வீடன், அக்-6

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்து, மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுப் பணம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் நேற்று முன்தினம் முதல் அறிவித்து வருகிறார். இதில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை நேற்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ், இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கேல் ஹூட்டன் ஆகியோருக்கு 2020ம் ஆண்டின் மருத்துவ நோபல் பரிசின் மொத்த தொகையான ரூ.8.27 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், பிரிட்டனை சேர்ந்த ரிய்ன்ஹார்ட் கென்செல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகளை பற்றிய ஆய்வுக்காகவும், விண்மீனின் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காகவும் மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து நாளை (7ம்தேதி) வேதியியல் துறைக்கும், 8-ம்தேதி இலக்கியத்திற்கும், 9-ம்தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *