திரையரங்கில் படம் பார்க்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!
டெல்லி, அக்-6

அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த முறை அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளா்வுகளில் அக்டோபா் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:
- 50 இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.
- ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.
*அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
- திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை மட்டுமே தியேட்டர்களில் தர வேண்டும்.
- திரையரங்குகளில் 24 முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரை ஏசி அளவை கடைபிடிக்க வேண்டும்.
- ஆன்லைன் டிக்கெட் முறையையே ஊக்கப்படுத்த வேண்டும்.
- கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை தியேட்டரில் இடைவெளியின் போது ஒளிபரப்ப வேண்டும்.
- பார்வையாளர்கள் திரையரங்கிற்குள் செல்லும் போது சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
*பார்வையாளர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே திரையரங்கில் அனுமதிக்கப்பட வேண்டும்.
*திரைப்பட இடைவேளையின் போது பார்வையாளர்கள் இருக்கைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.