அக்டோபர் 30ம் தேதி காஜல் அகர்வாலுக்கு திருமணம்..!

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 அன்று திருமணம் நடைபெறவுள்ளது.

மும்பை, அக்-6

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் 30 அன்று தொழிலதிபர் கெளதமை மணக்கவுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் காஜல் அகர்வால் கூறியுள்ளதாவது:- அக்டோபர் 30 அன்று மும்பையில் கெளதம் கிச்லு-வைத் திருமணம் செய்யவுள்ளேன். மிகச்சிறிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் என்னுடைய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *