நிதி நெருக்கடியில் ஐ.நா : வாரத்தில் 2 நாள் மூடல்

 

 அக்டோபர்.19

நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம் வாரத்தின் இறுதி நாட்களில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐ.நா.வின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவில், பண நெருக்கடி காரணமாக வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கமான ஐ.நா. வரவு செலவுத் திட்டத்தில் உங்கள் நாடு பங்களிப்பு செய்துள்ளதா?  என்றும் கேட்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பகிர்ந்துள்ள ஒரு ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான நிதிநிலை மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியுள்ளன. மொத்தத்தில், 34 உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் வழக்கமான நிதி நிலை மதிப்பீடுகளை ஐ.நா.வின் நிதி ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள  காலத்திற்குள் முழுமையாக செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.நா.வுக்கு தனது நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா. நிறுவனம் மிக மோசமான பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, அடுத்த மாதம் அதன் அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாமல் போகலாம் என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *