இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேருக்கு கொரோனா..!
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.03 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 66 லட்சத்தை தாண்டியது.
டெல்லி, அக்-6

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் 61,267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 66,85,083 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் மேலும் 884 போ் பலியாகினா். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 1,03,569 ஆக அதிகரித்தது.
56,62,491 போ் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். தற்போதைய நிலவரப்படி 9,19,023 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 5-ஆம் தேதி வரை 8,10,71,797 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 10,89,403 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.