தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 5,395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, அக்-5

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் மேலும் 5,395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,69,664 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,572 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,846-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,367 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,74,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 77,82,736 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,725 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,77,541 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,256 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,47,819 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,139 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *