ஆளுநர் பன்வாரிலால் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

சென்னை, அக்-5

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது குறித்தும், திருவள்ளூவர் பல்கலைக்கழகம் தொடர்பாகவும் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயாலளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆளுநரை முதல்வர் பழனிசாமி 6-வது முறை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *