திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..! ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!

துபாய், அக்-5

சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது தோல்வியால் சோர்ந்து கிடந்த ரசிகர்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா? என்ற போட்டியை பார்த்தனர். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 17.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து வென்றது. ஷேன் வாட்சன் – டு பிளெசிஸ் கூட்டணி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது.

முதல் ஆட்டத்தில் கண்ட வெற்றிக்குப் பிறகு தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு மீண்டுள்ளது. ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டாா். இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

வாட்சனை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையாக அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்துள்ளார். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போய் இருந்த சிஎஸ்கே தற்போது ஐபிஎல் தொடரில் கம் – பேக் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *