இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இதுவரை 1.02 லட்சம் பேர் பலி..!

நாட்டில் கொரோனாவால் உயிர்ந்தோர் எண்ணிக்கை 1.02 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 66 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-5

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 66,23,816 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 903 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55,86,704 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 76737 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *