பெயரை நியூமராலஜிபடி மாற்றிய ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்..!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமார் தனது பெயரை மாற்றம் செய்துள்ளார்.

தேனி, அக்-3

அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் தற்போது பரபரப்பாகி உள்ளது. இந்த பரபரப்புக்கு இடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்குமார் தனது பெயரை மாற்றம் செய்துள்ளார். அது அரசிதழில் வெளியாகியுள்ளது. அவர் ப.ரவீந்திரநாத்குமார் என்ற தனது பெயரை ப.ரவீந்திரநாத் என்று மாற்றம் செய்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், வடமாநில எம்.பி.க்கள் உள்பட பலரும் அவரை ரவீந்திரநாத் என்று அழைப்பதால், அவர் தனது பெயரில் இருந்த குமார் என்பதை நீக்கிவிட்டு, எண் கணித ஜோதிடப்படி (நியூமராலஜி) ரவீந்திரநாத் என்று மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

P.Raveendranath Kumar என்று இருந்த பெயரை eஐ கட் பண்ணிவிட்டு P.Ravindhranath என ஒரு iயும் கூடவே Hம் சேர்த்து உள்ளார். இவரது தந்தை ஓ.பன்னீர்செல்வம், 30 ஆண்டுகளுக்கு முன் பேச்சி முத்து என்ற தனது இயற்பெயரை பன்னீர்செல்வமாக மாற்றிக் கொண்டார். அதன் பிறகே அரசியலில் கோலோச்சத் தொடங்கினார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *