கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்த்தியாகம் செய்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னம்..!
கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலின்போது வீர மரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
லடாக், அக்-3

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி சீனா, இந்திய ராணுவ வீரர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அத்துமீறி ஊடுருவி தங்கிய சீன படையினரை இந்திய வீரர்கள் அப்புறபடுத்தியபோது கைகலப்பு நேரிட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இந்நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்த்தியாகம் செய்த 20 இந்திய வீரர்களை நினைவுகூரும் வகையில், லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி சாலையில் நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது. அங்கு கல்வான் மோதலில் உயிரிழந்த 20 வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜூன் 15ம் தேதி நடந்த சம்பவம் குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.