யாருக்கும் அஞ்ச மாட்டேன்..ராகுல் காந்தி ட்வீட்

உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி, அக்-2

மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினமான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும்போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *