இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியது..!

இந்தியாவில் கொரோனாவால் உயிர்ந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 63.64 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, அக்-2

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 63,94,069 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 81,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,095 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,773 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,52,078 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 78877 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,42,217 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *