சென்னையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!
சென்னை, அக்-2

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த வாரங்களில் பத்தாயிரத்துக்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இது மொத்த கொரோனா பாதிப்பில் 7% ஆகும். கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 3,228 பேர் பலியாகிவிட்டனர்.
சென்னையில் இதுவரை 1,68,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1,53,846 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 1,279 பேரும் அண்ணாநகரில் 1188 பேரும் தேனாம்பேட்டையில் 1,147 பேரும் அடையாறு மண்டலத்தில் 1072 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
