மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்.. நினைவிடங்களில் ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை
மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லி, அக்-2

மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைபோல், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 116-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன்படி, டெல்லி விஜய் காட்டில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைபோல், லால்பகதூர் சாஸ்திரியின் மகன்கள், சுனில் சாஸ்திரி, அனில் சாஸ்திரி உள்ளிட்டோரும் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.