தமிழகத்தில் புதிதாக 5,688 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் புதிதாக 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, அக்-1

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது.
- தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,47,335 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,516 பேர் குணமடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,586-ஆக உயர்ந்துள்ளது.
- சென்னையில் இன்று ஒரே நாளில் 1289 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 168689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை 74,41,697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,647 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 187 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,64,129 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,400 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,39,130 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,288 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
- பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.