இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடல் நல்லடக்கம்..!
உடல்நலக்குறைவால் காலமான இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி, அக்-1

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்(வயது 94) வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் இன்று காலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி மாவட்டம் சீராதோப்பிற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும், இந்துமுன்னணி தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி சீராதோப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் மறைந்த ராமகோபாலன் உடல் உறையூர் சீரா தோப்பில் உள்ள பாரதி வித்யாஷ்ரம் பள்ளியில் பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.