தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்…

சென்னை.அக்டோபர்.19

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது :-

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கு வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல், குமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமாக பெய்துள்ளது ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலவில் 13 செ.மழையும் , திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *