நீதித்துறை வரலாற்றில் இன்று கருப்பு நாள்..அசாதுதீன் ஒவைசி

நீதித்துறை வரலாற்றில் இன்றுகருப்பு நாள் என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டதீர்ப்பு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-30

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி, உமா பாரதி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவித்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை; பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்ட ஒன்றல்ல, திடீரென நடைபெற்றது எனக்கூறி குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘நீதித்துறை வரலாற்றில் இன்றுகருப்பு நாள். பாமர் மசூதி இடிக்கப்பட்டதில் எந்த சதியும் இல்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. தனிச்சையாக ஒருசெயல் நீர்த்துப்போக செய்ய எத்தனை மாதங்கள் தேவைப்படுகின்றன” என்று கேள்வி எழுப்பினார். பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது என்று குறிப்பிட்டார்.

தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய முஸ்லீம் சட்ட வாரியம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அரசியல் லாபத்திற்காக வன்முறையை உருவாக்குபவர்கள் அவர்கள் தான். அத்வானியின் ரத யாத்திரை எங்கு நடந்தாலும். அங்கு வன்முறையும், உயிரிழப்புகளும் அரங்கேற்றப்படுகின்றன என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட விடியோவையும், பத்திரிகை செய்திகளையும் ஆதாரங்களாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *