இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார்.

சென்னை, செப்-30

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது அவருக்கு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ சிகிச்சைக்குப்பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவுவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன்(94) சென்னையில் காலமானார். ராம கோபாலன் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *